கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நாகர்கோவிலுக்கு சென்றார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ’ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு வந்திருந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கேற்ற விழாவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், அந்தந்த மாநில மொழிகள், அந்த மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக இருந்தால்தான் சாதாரண மக்களுக்கு தங்கள் வழக்கு குறித்து புரிந்து கொள்ள முடியும் என கோரிக்கை முன் வைத்ததாகவும் தமிழ்நாடு நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க தொடர்ந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
சமீப காலமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ரகுபதியிடம் கருத்து கேட்டபோது, அண்ணாமலைக்கு பதில் சொல்லி அவரை பெரிய ஆளாக மாற்ற விரும்பவில்லை. சட்டத்தை மீறினால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அண்ணாமலைக்கு பதில் சொல்லி அவரை பெரிய ஆளாக மாற்ற விரும்பவில்லை பெண் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பெண் ஊழியர்களின் குழந்தைகளுக்காக காப்பகங்கள் அமைப்பது தொடர்பாக அவர் கூறுகையில், புதிதாக கட்டப்படும் நீதிமன்றக் கட்டடங்களில் அந்த வசதி ஏற்படுத்தி வருவதாகவும், ஏனைய நீதிமன்றங்களுக்கு கோரிக்கையின் அடிப்படையில் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:மக்கள் பயன்படுத்தும் பால் விலை உயர்த்தப்படவில்லை: அமைச்சர் நாசர்