தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடர் மழையால் குமரி மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

rain
rain

By

Published : Sep 22, 2020, 3:03 PM IST

கன்னியாகுமரியில் கடந்த சில நாள்களாகவே மழை நீடித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை முதல் பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து இன்றும் பரவலாக பெய்துவருகிறது. கடலோர கிராமங்கள், மலையோர நீர் பிடிப்பு பகுதிகளில் அதிகளவில் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சாலையில் வாகனம் ஓட்ட முடியாமல் திணறிவருகின்றனர்.

தொடர் மழையால் குமரி மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மேலும் நாகர்கோவிலில் முக்கிய குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் அப்பகுதியினர் அவதியடைந்துள்ளனர். விவசாய விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் விவசாயிகள் உள்பட கூலி வேலை, ரப்பர் பால் வெட்டும் தொழிலில் ஈடுபடுவர்களுக்கும் தொழில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு பெய்த கனமழையில் அதிகப்படியாக மயிலாடியில் 90.2மி.மீ, நாகர்கோவில் 54.8 மி.மீ, கொட்டாரத்தில் 52.4 மி.மீ மழை அளவும் பதிவாகியுள்ளது.

அதேபோல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பிவருவதால் இது விவசாயிகள் மத்தியில் சற்று நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 32.65 அடியாகவும், பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 68.88 அடியாகவும் சிற்றார் 1,11.31 அடியாகவும், சிற்றார் 2 11.41 அடியாகவும், பொய்கை 9.70, மாம்பழத்துறையாறு 54.12 அடியாகவும் உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க:நெல்லையில் வடகிழக்குப் பருவமழை போலி ஒத்திகைப் பயிற்சி!

ABOUT THE AUTHOR

...view details