கத்திரி வெயில் தொடங்கும் முன்னரே வெயிலின் தாக்கம் மக்களை விழிபிதுங்க வைத்துவருகிறது. வெயில் தாக்கத்தால் நகரப்பகுதியில் இருக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சுகின்றனர்.
இந்தச் சூழலில், குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. வெப்ப மிகுதி காரணமாக பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலைமை ஏற்பட்டது.