தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்கு எண்ணும் மையத்தில் புகுந்த திமுக, அதிமுக நிர்வாகிகள்!

கன்னியாகுமரி: அகஸ்தீஸ்வரம் ஊராட்சி வாக்கு எண்ணும் மையத்தில் புகுந்த கட்சி நிர்வாகிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

Kanyakumari local body election counting
Kanyakumari local body election counting

By

Published : Jan 2, 2020, 9:49 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 4ஆவது வார்டில் போட்டியிட்ட பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு தலா 1,251 வாக்குகள் கிடைத்தன. இதனால் பதிவான வாக்குகளை மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டுமென்று திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தினர்.

ஆனால், அப்போது அதிமுக மேலிட பிரதிநிதியான கவிஞர் சதாசிவம் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்றார். இதற்கு திமுகவினரும் காங்கிரஸ் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் வாக்கு எண்ணும் மையத்திற்குள் இருந்தால் நாங்களும் வருவோம் என்று கூறி அவர்களும் வாக்கு எண்ணும் மையத்துக்குள் சென்றனர்.

இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. காவல் துறையினர் அவர்களை வெளியே செல்லும்படி வலியுறுத்தினார்கள். அதிமுக பிரதிநிதி வெளியே செல்லவில்லை என்றால் நாங்களும் செல்ல மாட்டோம் என்று திமுகவினர் கூறி வாக்கு எண்ணும் மையத்திற்குளேயே இருந்தனர்.

வாக்கு எண்ணும் மையத்தில் புகுந்த திமுக, அதிமுக நிர்வாகிகள்!

இதனைத் தொடர்ந்து, அதிமுக மேலிட பிரதிநிதி கவிஞர் சதாசிவம் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியே வந்தார். பின்னர் திமுகவினரும் மையத்திலிருந்து வெளியேறினர்.

இதையும் படிங்க: வெற்றியை அறிவிக்காததால் வேட்பாளர் தர்ணா!

ABOUT THE AUTHOR

...view details