கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன்(45). இவர் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இவர் 2 நாட்களாக வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று (டிச.17) சொத்தவிளை கடற்கரை அருகே சாலையோரம் அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் உடல் கிடப்பதாக சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடம் சென்ற போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
கடற்கரையில் அழுகியில் நிலையில் கிடந்த காவலாளியின் உடல் - What is behind the murder
கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையில் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்த முருகன் என்பவரது உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
Etv Bharatகடற்கரையில் அழுகியில் நிலையில் கிடந்த காவலாளியின் உடல் - கொலையின் பின்னனி என்ன?
முதல்கட்ட தகவலில், இந்த உடல் முருகன் என்பவரது என்பது தெரியவந்தது. அதோடு வயிற்று பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு அதிக ரத்தம் வெளியேறி இருந்தற்கான அடையாளங்களை போலீசார் உறுதி செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:ஆளுநர் மாளிகையில் எரிந்த நிலையில் விழுந்த பலூன்!