காதலியுடன் மணமகன் ஓட்டம்: 'மகள் காணவில்லை' எனத் தாயார் புகார்! - Mother complains of 'daughter missing' in Nagercoil
குமரி: நாகர்கோவிலில் வேறொரு பெண்ணுடன் இன்று திருமணம் நடக்கவிருந்த மணமகன் நேற்றிரவு காதலியுடன் தலைமறைவானார். மகளைக் (காதலி) காணவில்லை என இளம்பெண்ணின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நாகர்கோவில் வாட்டர் டேங்க் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகள் விஜயபாரதி (25). இவரும் பிள்ளையார்புரம் பகுதியைச் சேர்ந்த ஹரி கோபாலன் என்பவரும் கடந்த ஐந்தாண்டுகளாக காதலித்துவந்துள்ளனர். இருவரும் நாகர்கோவிலில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றிவந்துள்ளனர்.
இந்நிலையில் ஹரி கோபாலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் இன்று திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் நேற்றிரவு ஹரி கோபாலன் தன்னுடைய காதலி விஜயபாரதியுடன் தலைமறைவானார்.
விஜயபாரதியின் தாயார் செல்வி, தனது மகள் காணவில்லை என நேசமணி நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதையடுத்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடிவருகின்றனர்.
இன்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் ஹரி கோபாலன் காதலியுடன் ஓட்டம் பிடித்ததால் அவரது பெற்றோர், உறவினர்கள் சோகமடைந்தனர்.