கன்னியாகுமரி:கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையில் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவில் தலைமை காவலராக பணிபுரிபவர் கிருஷ்ணரேகா. இவர் நெதர்லாந்தில் நடைபெற்ற உலக அளவிலான காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான தடகளப் போட்டியில் பங்கேற்று மகளிர் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்றார்.
வெற்றி பெற்ற போலிஸ் பெண் வீராங்கனை கிருஷ்ணரேகா நேற்று (ஆக. 6) ரயில் மூலம் நாகர்கோவில் ரயில் நிலையம் வந்தார். அங்கு அவருக்கு கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் கலந்து கொண்டு பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்தினார். இதில் ஏராளமான காவலர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் பங்கேற்றனர்.