கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த கோட்டார் பகுதியில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டுவருகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாகவும் தினமும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இங்கு வரும் நோயாளிகள் மருத்துவர்களை சந்தித்த பிறகு, மருத்துவமனை வளாகத்தில் உள்ள மருந்தகத்தில் மருந்துகளை இலவசமாக வாங்குவது வழக்கம். இந்த மருந்தகம் காலை ஒன்பது மணிக்கு முன்பே திறந்துவிடும்.
மருத்துவக் கல்லூரியில் திறக்கப்படாத மருந்தகம்... ஏமாற்றத்துடன் சென்ற நோயாளிகள்! - Government GH
கன்னியாகுமரி: கோட்டார் பகுதியில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காலை 10 மணியைக் கடந்தும் திறக்காததால் நோயாளிகள் மருந்துகள் வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
govt-ayurveda-hospital-issue