கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடக்காவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், ”அரசுப் பள்ளி மாணவர்களின் 7.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டில் ஆளுநர்களின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. திமுக கூட்டணி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் மத்திய அரசு ஆட்டுவிக்கும் பொம்மைகளாக உள்ளனர். இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஆளுநர்களும் பாஜாவின் சேவகர்களாகவே உள்ளனர். இவர்களிடம் இருந்து என்ன நீதியை எதிர்பார்க்க முடியும்” என்றார்.