கன்னியாகுமரி:சிற்றாறு அரசு ரப்பர் தோட்டத்தில் ரப்பர் பால் வெட்டுவதற்காக, இன்று (டிச.30) வழக்கம்போல் பணியாட்கள் வேலைக்குச் சென்றுள்ளனர். அப்போது அங்கு திடீரென குட்டியுடன் வந்த பெண் யாணை, பால் வடிக்கச் சென்றவர்களை விரட்டி உள்ளது. இதனால் தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர். ஆனால், ஞானவதி (50) என்பவரை மட்டும் யானை மிதித்துள்ளது.
கணவர் கண்முன்னே யானை மிதித்து பெண் தொழிலாளி உயிரிழப்பு! - elephant fight videos
குமரி மாவட்டம், சிற்றாறு அரசு ரப்பர் தோட்டத்தில் யானை மிதித்ததில் பெண் தொழிலாளி உயிரிழந்துள்ளார்.
யானை மிதித்து அரசு ரப்பர் தோட்ட பெண் தொழிலாளி உயிரிழப்பு!
இதில் அப்பெண் உயிரிழந்துள்ளார். இங்கு அடிக்கடி யானைகள் வருவதை வனத்துறையினரிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் உயிரிழந்த பெண்ணின் கணவர் மோகன்தாஸ் முன்னிலையில் இந்த துயரம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கிராமப் பகுதிகளில் சுற்றி திரியும் ஒற்றை காட்டு யானையால் மக்கள் அச்சம்