நம் நாட்டிற்கு அந்நிய செலவாணியை ஈட்டித்தரும் தொழில்களில் ரப்பர் உற்பத்தி முக்கிய பங்கு வகுக்கிறது. அந்தவகையில் ரப்பர் தொழிலை பொறுத்தவரை கேரளாவிற்கு அடுத்த படியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் தடிக்காரன்கோணம், மாரமலை என மாவட்டம் முழுவதும் 30 ஆயிரம் ஹேக்டேரில் தனியார் நிறுவனங்கள் ரப்பர் விவசாயம் செய்துவருகின்றனர்.
இதில், அரசு ரப்பர் கழகம் சார்பில் ஐந்தாயிரம் ஹேக்டேரில் ரப்பர் விவசாயம் செய்யப்படுகிறது. கீரிப்பாறை, மணலோடை, சிற்றார், மயிலாறு, கோதையாறு என ஐந்து கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு ரப்பர் மரங்கள் வளர்க்கப்பட்டுவருகின்றன.
இந்தக் கோட்டங்களின் மரங்களிலிருந்து தினசரி எடுக்கப்படும் ரப்பர் பந்துகளை கீரிப்பாறை அரசு ரப்பர் கழகத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கு தரம் பிரிக்கப்பட்டு மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில் உள்ள ரப்பர் சார்ந்த பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பிவைக்கபடுகின்றன.