இதுகுறித்து தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் பயணிகள் ரயில் சேவை அனைத்தும் முற்றிலுமாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்காக சரக்கு ரயில்கள் மற்றும் பார்சல் கொண்டு செல்லும் வசதி கொண்ட சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன.
அதன்படி ஏற்கனவே நாகர்கோவில்-சென்னை எழும்பூர் இடையே வண்டி எண்- 00658 மற்றும் சென்னை எழும்பூர்-நாகர்கோவில் இடையே வண்டி எண்- 00657 இயக்கப்பட்டுவருகிறது. இந்த ரயில்கள் இன்றுவரை (14ஆம் தேதி) மட்டும் பார்சல் சர்வீஸ் சேவைக்காக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த பார்சல் சர்வீஸ் ரயில் சேவை வருகின்ற 25ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.