கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பரமதானபுரம் csi ஆலயத்தின் கிறிஸ்தவ மத போதகராக பணியாற்றி வருபவர் தங்கராஜ். இவர் நேற்று இரவு வழுக்கும் பாறைகளில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் தனது நண்பருடன் வடுகன்பற்று அருகே சென்று கொண்டிருந்தபோது அவர்களை தீடிரென மூன்று இரு சக்கர வாகனத்தில் 5 பேர் பின் தொடர்ந்து சென்று வழிமறித்துள்ளனார்.
மத போதகரை வழிமறித்து தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளை - நகை, பணம் கொள்ளை
கன்னியாகுமரி : இருசக்கர வாகனத்தில் வந்த ஐந்து பேர் , கிறிஸ்தவ மத போதகரை வழிமறித்து ஐந்து பவுன் தங்க நகைகள் மற்றும் மூன்றரை லட்சம் பணம் கொள்ளை , தப்பி சென்றவர்களை தேடி வருகின்றனர்.
கிறிஸ்தவ மத போதகரை வழிமறித்து தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளை
கத்தியை காட்டி மதபோதகர் இடம் இருந்த 5 பவுன் தங்க நகைகள் மற்றும் மூன்றரை லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தங்கராஜ் உடனடியாக தென்தாமரைகுளம் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். இத்தகவலின் பெயரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து , தப்பி சென்ற ஐந்து பேரையும் தேடி வருகின்றனர்.