தொடர்ந்து பெய்துவந்த கனமழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் மழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கன்னியாகுமரியில் நேற்று (நவ. 13) பெய்த கனமழையால், ஏற்பட்ட வெள்ள நீரில், அப்பகுதி பெண்கள் ஜாலியாக குளித்து விளையாடும் காணொலி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இது ஆபத்தான செயலாகும்.