தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கன்னியாகுமரியில் வெடி விபத்தில் உடல் சிதறி சிறுமி உயிரிழப்பு! - சிறுமி உயிரிழப்பு

கன்னியாகுமரி அருகே வெடி விபத்தில் உடல் சிதறி சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், சிறுமியின் தந்தையை கைதுசெய்து காவல் துறையினர் அவரிடம் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரியில் வெடி விபத்தில் உடல் சிதறி சிறுமி உயிரிழப்பு!
கன்னியாகுமரியில் வெடி விபத்தில் உடல் சிதறி சிறுமி உயிரிழப்பு!

By

Published : Mar 15, 2022, 10:59 PM IST

கன்னியாகுமரி:ராஜாக்கமங்கலம் அருகே ஆறுதெங்கன்விளையைச் சேர்ந்தவர் ராஜன்(40). கூலித் தொழிலாளியான இவர் வீட்டில் பட்டாசு தயாரிக்கும் தொழிலையும் நடத்தி வருகிறார். இவருக்கு 8ஆம் வகுப்பு பயிலும் தேன்மொழி(13), 5ஆம் வகுப்பு பயிலும் வர்ஷா (10) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.

ராஜன் திருவிழாக்களுக்கு பட்டாசு தயாரிப்பதற்காக வெடிமருந்தை தனது வீட்டின் அருகில் உள்ள சாய்வு அறையில் வைத்திருந்தார். நேற்றிரவு(மார்ச் 14) இவர் வீட்டில் வளர்த்துவந்த முயல்களுக்கு இரை வைப்பதற்காக வர்ஷா அந்தப் பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து வெடித்து சிதறியது. வெடிமருந்து வெடித்ததில் அந்த அறை இடிந்து விழுந்தது.

விசாரணையில் காவலர்கள்..

மேலும், வர்ஷாவும் உடல் சிதறி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது தாயார் பார்வதிக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இதுகுறித்து ராஜாக்கமங்கலம் காவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து சென்ற காவலர்கள் வர்ஷாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் ராஜன் வெடிப்பொருள்களை வீட்டில் பட்டாசு தயாரிப்பதற்காக வைத்திருந்தது தெரியவந்ததையடுத்து, காவலர்கள் அவரை கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் காவல் ஆய்வாளர் காந்திமதி, மேல் விசாரணை செய்துவருகிறார்.

இதையும் படிங்க: ரெய்டு: 'அலுவலர்களை சூழ்ந்து எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய அதிமுகவினர்'

ABOUT THE AUTHOR

...view details