கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே சந்தைவிளை பகுதியைச் சேர்ந்த சடையன் - தேவி தம்பதியினர். இவர்களுக்கு மூன்று வயதில் வீரம்மா என்ற பெண் குழந்தை உள்ளது. சடையனும், தேவியும் நாகர்கோவில் மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக உள்ளனர். இந்நிலையில், இவர்கள் குழந்தையுடன் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் இரவு தூங்கி கொண்டிருந்தனர்.
கன்னியாகுமரியில் 3 வயது பெண் குழந்தை மாயம் - Girl Child
கன்னியாகுமரி: நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்த மூன்று வயது பெண் குழந்தை மாயமானது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண் குழந்தை மாயம்!
அதிகாலையில் எழுந்து பார்த்தபோது, குழந்தை கடத்தப்பட்டது தெரியவந்தது. அதன்பின் சடையன் - தேவி தம்பதியினர், காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதனடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி பதிவுகளை கொண்டு குழந்தை கடத்தப்பட்டதா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Last Updated : Aug 13, 2019, 7:50 AM IST