சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு நிலவும் சீரான தட்பவெப்பநிலை, சுத்தமான காற்றின் காரணமாகத் தான் அதிகமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். அப்படி வருகின்ற சுற்றுலா பயணிகள் மும்மதங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள காந்தி மண்டபத்திற்குள் அமராமல் செல்வதில்லை.
அப்படி வந்து அமரும் சுற்றுலா பயணிகள் இங்கு தியானம் செய்யும் அமைதியான சூழல் இருப்பதால் சிறிது நேரம் தியானத்தில் ஈடுபடுகின்றனர். மேலும் மாலை நேரங்களில் இந்த வளாகத்தில் உள்ள பூங்காவிலும் அமர்ந்து ஓய்வு எடுக்கின்றனர். இந்நிலையில் காந்தி மண்டப வளாகத்தில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சியின் ஊழியர்கள் எடுத்துச் செல்லாமல் அவ்வப்போது இந்த வளாகத்தில் குவித்து வைத்து எரிந்துவிடுகின்றனர்.