அதன்படி, கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வசந்தகுமார் தாக்கல் செய்த வேட்புமனுவில் தனது ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 417 கோடியே 49 லட்சத்து 30 ஆயிரத்து 444 என்று தெரிவித்துள்ளார். இதேபோல், பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள தனது வேட்பு மனுவில் அவரது மொத்த சொத்து மதிப்பு ஏழு கோடியே 49 லட்சத்து 96 ஆயிரத்து 453 என தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி - 4 கோடீஸ்வர வேட்பாளர்கள் ! - candidates
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் 4 பேர் கோடீஸ்வர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் லட்சுமணன் தாக்கல் செய்துள்ள அவரது வேட்பு மனுவில் அவரது ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 11 கோடியே 34 லட்சத்து 16 ஆயிரத்து 99 என்று தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மைய வேட்பாளர் எபினேசர் அவரது சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுவில் அவரது சொத்து மதிப்பு 2 கோடியே 36 லட்சம் என்று தெரிவித்துள்ளார். இந்த சொத்து விவர பட்டியலின்படி குமரி மாவட்டத்தில் போட்டியிடும் முக்கிய கட்சிகளைச் சேர்ந்த நான்கு வேட்பாளர்களும் கோடீஸ்வரர்களாகவே உள்ளனர்.
குறிப்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வசந்தகுமார் அதிக சொத்து உள்ளவராக கணக்கிடப்பட்டுள்ளார்.