தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரி அருகே யானைகளால் பீதி - வனத்துறை நடவடிக்கை எடுக்கக்கோரிக்கை - kanyakumari Elephant

கன்னியாகுமரி மாவட்டம், பத்துக்காணி பகுதியில் ஊருக்குள் நுழைந்த யானைகளால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 9, 2022, 3:14 PM IST

கன்னியாகுமரி:பத்துக்காணி தபால் நிலையம் அருகே நேற்று (டிச.8) இரவு கூட்டமான காட்டு யானைகள் வீடு ஒன்றின் வளாகத்தில் நுழைந்து தென்னை மரத்தை வேரோடு சாய்த்தன. இதனால், அப்பகுதியில் இருந்தவர்கள் பீதியடைந்தனர்.

நேற்று தினம் இரவு சுமார் இரண்டு மணி அளவில் யானையின் அலறல் சத்தம் கேட்ட தங்கம் என்ற மூதாட்டி, வீட்டின் வெளியே வந்து பார்க்கின்றபோது, இரண்டு மிகப்பெரிய காட்டு யானைகள் தங்களின் வீட்டின் அருகே உள்ள ஒரு தென்னை மரத்தை காலால் மிதித்து அதன் ஓலைகளை உண்ணுகின்ற காட்சியைக் கண்டு அலறியடித்து ஓட்டம் பிடித்தார்.

அப்போது சத்தம் கேட்டு வெளியே வந்த அக்கம்பக்கத்தினரும் தங்களின் வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்து அருகிலுள்ள உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். இந்நிலையில், இவ்வாறு யானைகள் அடிக்கடி வந்து செல்வதால் தங்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளதாகவும், உடனே வனத்துறையினர் யானைகள் குடியிருப்புகளுக்குள் நுழையாமல் தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

குமரி அருகே யானைகளால் பீதி - வனத்துறை நடவடிக்கை எடுக்கக்கோரிக்கை

இதையும் படிங்க: Mandous Cyclone:பழவேற்காடு-காட்டுப்பள்ளி துறைமுக சாலை துண்டிப்பு!

ABOUT THE AUTHOR

...view details