தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை குறைவு! - மலர் சந்தை

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் பிரபலமான தோவாளை மலர் சந்தையில் பூக்களின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை வெகுவாக குறைந்துள்ளது.

தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை குறைவு!

By

Published : May 12, 2019, 7:59 AM IST

குமரி மாவட்டத்தில் தோவாளை பகுதியில் பிரபலமான மலர் சந்தை செயல்பட்டுவருகிறது. இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

குமரி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் தொடர்ந்து திருவிழாக்கள், கொடை விழாக்கள் ஆகியவை நடந்து வந்ததால் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை உச்சத்தில் இருந்தது.

தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை குறைவு!

இந்நிலையில், தோவாளை மலர் சந்தைக்கு பூக்களின் வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளதால் பூக்களின் விலை வெகுவாக குறைந்துள்ளது.

குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப்பூ, 150 ரூபாய்க்கும், 400-க்கு விற்பனை செய்யப்பட்ட பிச்சிப்பூ, 300 ரூபாய்க்கும், கனகாம்பரம் 500 ரூபாயிலிருந்து 150ஆக குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details