கன்னியாகுமரி:தோவாளை சந்தையிலிருந்து கேரளா மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏராளமான பூக்கள் தினசரி ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் மலர் சந்தையில் பண்டிகை காலங்களில் பூக்களின் விலை வழக்கத்தை விட பல மடங்கு உயர்ந்து வருகிறது. நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட கிறிஸ்தவ மக்கள் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் தேவாலயங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பூக்களால் அலங்காரம் செய்யப்படுவது வழக்கம் அந்த வகையில் பூக்களை வாங்கி செல்ல தோவாளை பூச்சந்தையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
கேரளாவிலிருந்து ஏராளமான கிறிஸ்தவர்களும், வியாபாரிகளும் பூக்களை வாங்கிச் செல்ல வந்து செல்கின்றனர். தமிழ்நாட்டில் மதுரை, அருப்புக்கோட்டை, சங்கரன்கோவில், ராயக்கோட்டை, ஒசூர் மற்றும் பெங்களூரிலிருந்து தோவாளை மலர் சந்தைக்கு வித விதமான ஏராளமான பூக்கள் வந்து குவிந்துள்ளன.