கன்னியாகுமரி மாவட்டத்தில் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஏராளமான ஆழ் கடல் மீன்பிடி விசைப் படகுகள் மீன்பிடிக்க செல்கின்றன. புயல், மழை எச்சரிக்கை போன்ற முன்னெச்சரிக்கை தகவலை தெரிவிப்பதற்காக, அரசின் சார்பில் மீனவர்களுக்கு சேட்டிலைட் தொலைத்தொடர்பு கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு மாதம்தோறும் ரூ. ஆயிரத்து 481 செலுத்தி பயன்படுத்தி வந்தனர்.
தற்போது எந்தவித முன்னறிவிப்புமின்றி கடந்த ஏப்ரல் மாதம் முதல், மாதத்தவணை ரூ. 3 ஆயிரத்து 441 ஆகவும், தவறும் பட்சத்தில் ரூ. 12 ஆயிரம் அபராதமும் விதித்து பிஎஸ்என்எல் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே கரோனா காரணமாகவும், மீன்பிடி தடையாலும் மீனவர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ள கட்டண உயர்வு மீனவர்களை மேலும் பாதிப்படைய செய்துள்ளது.