கடந்த சில நாட்களாக மழை குறைந்ததைத் தொடர்ந்து தேங்காய்பட்டணம் மற்றும் கேரளா மாநிலத்தின் கொச்சியில் இருந்து குமரி மாவட்ட மீனவர்கள் சுமார் ஐநூறு படகுகளில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
இந்நிலையில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் நேற்றைய தினம் கர்நாடக மாநிலம் மங்கலாபுரம், லட்சத்தீவு ஆழ்கடல் பகுதியில் ஏற்பட்ட புயல் காற்றில் பாதிப்படைந்துள்ளார்கள். மீனவர்களும் விசைப்படகுகளும் புயல் காற்றை எதிர்கொள்ள முடியாமல் தவித்தபோது, அவ்வழியாக வந்த கப்பலின் உதவியுடன் சுமார் 250 மீனவர்கள் அடைக்கலம் பெற்று, லட்சத் தீவில் மீனவர்கள் கரை சேர்ந்துள்ளனர்.