தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 28, 2020, 7:30 PM IST

ETV Bharat / state

சர்வதேச கிக் பாக்ஸிங் போட்டி: வெள்ளிப் பதக்கம் வென்ற மீனவ இளைஞர்!

கன்னியாகுமரி : ராமன் துறை மீனவக் கிராமத்தைச் சேர்ந்த மீனவ இளைஞர் டெல்லியில் நடைபெற்ற சர்வதேச கிக் பாக்ஸிங் போட்டியில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்தார்.

ajay ferox
ajay ferox

கன்னியாகுமரி மாவட்டம் ராமன் துறை மீனவக் கிராமத்தைச் சேர்ந்தவர் இளைஞர் அஜய் பிராக்ஸ். இவர் டெல்லியில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் 64 கிலோ எடை பிரிவில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

வெள்ளிப் பதக்கம் வென்று மாநிலத்திற்கும், சொந்த ஊருக்கும் பெருமைச் சேர்த்துள்ள அஜய் பிராக்ஸிற்கு கன்னியாகுமரியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து வாலிபர் அஜய் பிராக்ஸ் கூறுகையில், "எனக்கு சிறுவயதிலிருந்தே பாக்ஸிங் விளையாட வேண்டும் என்ற ஆசையால், பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு பாக்ஸிங் கற்றுக்கொண்டேன். இதுவரை தேசிய அளவில் ஒரு தங்கப் பதக்கம், இரண்டு வெண்கலப் பதக்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளேன்.

வெள்ளிப்பதக்கம் வென்ற மீனவ இளைஞர்

தற்போது டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது. பதக்கங்களை வென்றாலும் மேலும் பயிற்சியை தொடர என்னிடம் போதுமான வருமானம் இல்லை.

எங்கள் கிராமத்தைச் சேர்ந்த சில மாணவர்களுக்கு நான் பயிற்சி அளித்து வருகிறேன். எனது மாணவர்கள் இரண்டு பேர் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளனர். அரசு உதவி செய்தால் தீவிர பயிற்சி மேற்கொண்டு இந்தியாவிற்காக மேலும் பதக்கங்கள் வெல்வேன்" என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'எனக்கா கறி இல்லனு சொல்ற... அப்போ அதைச் சாப்பிட்டா கொரோனா வருதுனு நான் சொல்வேன்’ - வதந்தி பரப்பிய சிறுவன் கைது

ABOUT THE AUTHOR

...view details