கன்னியாகுமரி அருகேயுள்ள மேல மணக்குடி லூர்து நகரைச் சேர்ந்த மீனவர் வின்சென்ட் (34). இவரது மனைவி தஸ் நேவிஸ் மேரி சஜினி (24). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வின்சென்ட் தனது மனைவியுடன் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது சாலையில் சென்ற கீழமணக்குடியைச் சேர்ந்த கிதியோன் என்பவர் வின்சென்ட் மனைவிமீது டார்ச் லைட் அடித்துள்ளார். இதனைப் பொறுக்க முடியாத வின்சென்ட் டார்ச் லைட் அடித்த கிதியோன் என்பவரைத் தட்டிக் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கிதியோன் நள்ளிரவில் தனது நண்பர்களை அழைத்து வந்து வின்சென்ட்டை அரிவாள் மற்றும் பல்வேறு ஆயுதங்களால் தாக்கியுள்ளார்.