"குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான கடல் பகுதியில் காற்றின் வேகம் 45 முதல் 60 கிலோ மீட்டர் வரையும், அலையின் உயரம் 3.5 மீட்டர் உயரம் முதல் 3.8 மீட்டர் வரையும் இருக்கும். எனவே, அப்பகுதி மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்" என மீன்வளத் துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.
எச்சரித்த மீன்வளத் துறை! 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு
கன்னியாகுமரி: இன்று காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்ற மீன்வளத் துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து கன்னியாகுமரி விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
காற்றின் வேகத்தால் 10 பேர் பாதிப்பு
மீன்வளத் துறையின் எச்சரிக்கை அறிவிப்பையொட்டி, கன்னியாகுமரி, சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லவில்லை.
இதன் காரணமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கன்னியாகுமரி மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளாவில் மீன்களின் விலை அதிகளவில் விற்கப்படுகின்றன.