குமரி மாவட்டத்தில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் குளச்சல், முட்டம் மீன்பிடித் துறைமுகங்களை தங்கு தளமாகக் கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் 2000-க்கும் மேற்பட்ட கட்டுமரம், வல்லம் மற்றும் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில் மீனவர்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த 15 நாட்களுக்கு முன் கட்டுமரம், வல்லம் மீனவர்கள் மட்டும், மீன்பிடிக்கச் செல்ல அரசு அனுமதி அளித்தது. எனினும், கடந்த ஒரு வாரமாக பெரிய அளவில் மீன் வரத்தின்றியே காணப்பட்டது. இந்நிலையில் குளச்சலைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட கட்டுமரம், வல்லம் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்று மீண்டும் குறைந்த அளவிலான மீன்களுடனே கரை திரும்பினர்.