தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு 60 நாட்கள் போடப்பட்ட மீன் தடைக்காலம் நேற்றைய (ஜூன் 15) தினம் முடிவடைந்தது. இதனையடுத்து சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் மகிழ்ச்சியுடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
பின் இன்று கரை திரும்பிய மீனவர்கள் தெரிவிக்கையில், அதிகளவில் மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மிகவும் மகிழ்ச்சியுடன் சென்றோம். பெரிய மீன்கள் குறைந்த அளவில் கிடைத்தாலும் சிறிய வகையிலான மீன்கள் அதிக அளவில் கிடைத்தாக தெரிவித்தனர்.