மோட்டார் வாகன சட்டத்திருத்தம் என்ற பெயரில் ஆட்டோ ஓட்டுநர் தொழிலாளர்களுக்கு பல இன்னல்களை மத்திய அரசு கொடுத்துவருவதாக குற்றச்சாட்டு உள்ளது. அதில், ஒன்றாக தனியார் நிறுவனங்கள் (3 M இந்தியா மற்றும் ஏவரி டென்னீசன்) தரும் ஒளிபிரதிபலிப்பான் ஸ்டிக்கரை ஆட்டோவின் முன்பகுதியில் சில்வர், பின்புறம் சிகப்பு, பக்கவாட்டில் மஞ்சள் நிறம் என்ற அடிப்படையில் ஒட்டி பிரத்யேகமான செயலி மூலமாகப் படம் எடுத்து அனுப்பினால்தான் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் எஃப்.சி. பார்க்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், தனியார் நிறுவனங்கள் நாடு முழுவதும் முகவர்களை நியமித்து ஸ்டிக்கர் ஒட்டிவருகின்றனர். இதற்கு 450 முதல் 1000 ரூபாய் வரை கட்டாய வசூல்செய்யப்படுகிறது.