கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த பொறியாளர் தங்கபென்சன்(36). இவர் மும்பையில் பள்ளிப்படிப்பை முடித்த இவர், பொறியியல் படிப்பை நாகர்கோவிலில் படித்தார்.
பின்னர், மும்பையில் பணிபுரிந்து வந்த தங்கபென்சன், மும்பையைச் சேர்ந்த பாத்திமாவை(39) என்ற விதவைத் தாயை காதலித்து 2010ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த திருமணத்திற்காக, இஸ்லாம் மதத்துக்கு மாறிய அவர், தனது பெயரையும் முகமது அலிஷேக் என மாற்றிக்கொண்டார். தங்க பென்சன்–பாத்திமா தம்பதிக்கு, ரீகன் ஷேக், அயன் என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன.
இரண்டாம் திருமணம் செய்து கொண்ட பொறியாளர் பின்னர், கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதூருக்கு வந்த தங்கபென்சன், நெல்லை மாவட்டம் வள்ளியூர் கும்பிகுளம் கிராமத்தைச் சேர்ந்த உறவுக்கார பெண்ணான ஷகிலா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமண புகைப்படத்தை கடந்த ஜூன் மாதம் முகநூலில் பதிவிட்டிருக்கிறார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியான முதல் மனைவி பாத்திமா, மும்பையில் உள்ள தமிழ்ச் சங்கத்தினரை தொடர்புகொண்டு தனது நிலையை விளக்கியுள்ளார். மும்பை தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த சில பெண்கள் உதவியுடன் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் செய்தார். அதனடிப்படையில் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து தங்கபென்சனை கைது செய்தனர்.
இது குறித்து தங்கபென்சனின் உறவினர்கள் கூறுகையில், மும்பையைச் சேர்ந்த பாத்திமாவின் முதல் கணவர் உயிருடன் உள்ளதாகவும் தங்கபென்சனை ஏமாற்றி சொத்துக்களை விற்றதாகவும் தெரிவித்தனர். மேலும், பாத்திமா, இருபது லட்ச ருபாய் பணம் கேட்டதாகவும், தங்கபென்சன் பணம் கொடுக்காததால் பொய்ப் புகார் கொடுத்து அவரை காவல் துறையினரிடம் சிக்க வைத்ததாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க : மைனர் பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றியவர் போக்சோ சட்டத்தில் கைது