கன்னியாகுமரி: ரவுடிகளின் நடமாட்டம், போதை பொருட்கள் தடுப்பு நடவடிக்கை மற்றும் சூதாட்டம், லாட்டரி சீட்டு போன்றவை தடை செய்யப்பட்டு போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் பல்வேறு பகுதிகளில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்களும், பணம் வைத்து சூதாட்டம் ஆடுவதும் தடை செய்யப்பட்டுள்ள லாட்டரி டிக்கெட் மற்றும் ஆன்லைன் லாட்டரி விற்பனையும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நாகர்கோவில் மைய பகுதியான சிதம்பரம் நகரில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நிகழ்விடத்தில் சென்ற கோட்டார் காவல் நிலைய போலீசார், அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக கிள்ளியூர் ஒன்றிய முன்னாள் செயலாளர் ரெஜிஷ் ராஜ் உட்பட 11 பேரை கைது செய்தனர்.