கன்னியாகுமரி மாவட்டத்தில், இடைத்தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் பணப்பட்டுவாடா நடப்பதைத் தடுக்கும்விதமாக மாவட்டம் முழுவதும் 18 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பறக்கும் படையினர் தொகுதி வாரியாகப் பிரிக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
குமரியில் 97 ஆயிரம் ரூபாயைக் கைப்பற்றிய தேர்தல் பறக்கும் படை! - தேர்தல் பறக்கும் படையினர்
கன்னியாகுமரி: கொட்டாரம் பகுதியில் வாகன சோதனையின்போது உரிய ஆவணங்களின்றி எடுத்துச்செல்லப்பட்ட 97 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்செய்தனர்.
இந்நிலையில், இன்று (மார்ச் 8) கொட்டாரம் அருகே அச்சன்குளம் பகுதியில், பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு கன்னியாகுமரியிலிருந்து வந்த கேரளா பதிவு எண் கொண்ட காரை பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
காரில் பிரதீப் (43) என்பவர் குடும்பத்தினருடன் இருந்தார். அவர்களது கைப்பையைச் சோதனை செய்தபோது உரிய ஆவணம் இன்றி 97 ஆயிரம் ரூபாய் இருந்தது. அதனைக் கைப்பற்றிய பறக்கும் படையினர் தோவாளை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.