தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

52 லட்சம் பணம் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி - அரசு பேருந்து

கன்னியாகுமரி: அரசு பேருந்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 52 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

NGL

By

Published : Mar 29, 2019, 3:53 PM IST

தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை அமலில் உள்ளது.
இந்நிலையில் குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தேரேகால்புதூர் பகுதியில் துணை வட்டாட்சியர் சரஸ்வதி தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் அந்த வழியாக வந்த வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது திருச்சியில் இருந்து நாகர்கோவிலுக்கு அரசு பேருந்து ஒன்று அவ்வழியாக வந்தது. அதை தடுத்து நிறுத்திய பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது அந்த பேருந்தில் பயணி கனகராஜ் என்பவரிடம் 22 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் மற்றொரு பயணியான முஹம்மது ஹனிபா என்பவரிடம் 30 லட்சம் ரூபாய் இருந்தது கண்டறியப்பட்டது.

பறிமுதல் செய்த ரூ 52 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் கஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அனில்குமாரிடம் ஒப்படைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details