ஏத்தன் குலைகள் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் கவலை! - ஏத்தன் குலைகள்
கன்னியாகுமரி: தக்கலை பகுதிகளில் ஏத்தன் குலைகள் விளைச்சல் அமோகமாக இருந்தும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏத்தன் வாழை விவசாயம் அதிகமாக செய்யப்பட்டு வருகிறது. தக்கலை, வில்லுகுறி, வெள்ளிச்சந்தை, தலக்குளம் போன்ற பகுதிகளில் ஏத்தன் வாழை விளைச்சல் அமோகமாக உள்ளது. ஆனால், கரோனா வைரஸின் தாக்கத்தால் வெளிநாடுகளுக்கு விமான சேவை முற்றிலும் தடைப்பட்டுள்ளதால், ஏத்தன் வாழைக் குலைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியவில்லை.
இதனால் கிலோ 80 ரூபாய் விற்க வேண்டிய ஏத்தன் குலைகள் கிலோ 40 ரூபாய்க்கு உள்ளூர் சந்தைகளிலும், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலத்திற்கு வாகனங்களிலும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. விளைச்சல் அதிகமாக இருந்தாலும் விலை குறைவு காரணத்தால் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.