தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரியில் கேரள சுற்றுலா பயணி தற்கொலை மிரட்டல்.. நடந்தது என்ன?

கேரளா மாநில சுற்றுலா பயணி குடும்பத்திற்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக கன்னியாகுமரியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் உள்ள மாடி மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுலா பயணி மாடியில் நின்று தற்கொலை மிரட்டல்!..நடந்தது என்ன?
சுற்றுலா பயணி மாடியில் நின்று தற்கொலை மிரட்டல்!..நடந்தது என்ன?

By

Published : Apr 10, 2023, 6:08 PM IST

Updated : Apr 10, 2023, 10:21 PM IST

சுற்றுலா பயணி மாடியில் நின்று தற்கொலை மிரட்டல்!..நடந்தது என்ன?

கன்னியாகுமரி:உலகின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கன்னியாகுமரியில், சுற்றுலா சீசன்கள் ஏப்ரல், மே மாதங்களில் தொடங்கிவிடும். இந்த காலகட்டத்தில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், இந்தியாவின் பல மாநிலங்கள் மற்றும் பல்வேறு வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவது வழக்கம்.

இந்நிலையில் கேரளா மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் நூரநாடு பகுதியைச் சேர்ந்த 57 பேருடன், ரதீஸ் (வயது 32) அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளும் தனியார் சுற்றுலா பேருந்தில் கன்னியாகுமரிக்கு வந்துள்ளனர். இவர்கள் கடந்த 6-ஆம் தேதி ஆலப்புழாவிலிருந்து புறப்பட்ட நிலையில் பழனி, ராமேஸ்வரம், திருச்செந்தூர் போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்றுவிட்டு, நேற்று இரவு(ஏப்ரல் 9) கன்னியாகுமரி வந்துள்ளனர். இந்தநிலையில், இன்று காலை சூரிய உதயம்(sun rise) பார்க்க உடன் வந்த அனைவரும் சென்றுள்ளனர். ஆனால், ரதீஸ் மட்டும் அவர்களுடன் செல்லவில்லை. அதன் பின், ரதீஸ் மது போதையிலிருந்ததாக கூறப்படுகிறது. இதனால், கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ரதீஸ் திடீரென தங்கியிருந்த தனியார் விடுதியின் 3-ஆவது மாடிக்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கன்னியாகுமரி காவல் நிலையத்திற்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர், தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் லாவகமாகப் பேசி ரதீஸை கீழே இறங்க வைக்க முயன்ற நிலையில் அவர், இவர்களைத் திசை திருப்பிவிட்டு நான்காவது மாடிக்குச் சென்றுள்ளார்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து, போலீசார் மீண்டும் பேச்சுவார்த்தை மேற்கொண்டு அவரை இரண்டாவது மாடிக்கு வரவழைத்து ஏணி மூலம் கீழே இறக்க முயன்றனர். அப்போது ரதீஸ் திடீரென ஏணியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் ரதீஸ் கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து ரதீஸை மீட்ட போலீசார் அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கேரளா மாநில சுற்றுலா பயணிகளான கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் தனியார் தங்கும் விடுதியில் உள்ள மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:ஒகேனக்கலில் "பரிசல் ஓட்டிகள் பகல் கொள்ளை" என புகார்.. நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்!

Last Updated : Apr 10, 2023, 10:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details