தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணமாகி 17 ஆண்டுகள் கழித்தும் தொடரும் வரதட்சணை கொடுமை - காவல்துறை விசாரணை

கன்னியாகுமரி: திருமணமாகி 17 ஆண்டுகள் ஆன பின்னும் வரதட்சணை கேட்டு, கொடுமைபடுத்தி மனைவியை பிள்ளைகளுடன் வீட்டை விட்டு கணவன் துரத்தியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

Dowry cruelty after 17 years of marriage
Dowry cruelty after 17 years of marriage

By

Published : Aug 16, 2020, 1:17 AM IST

Updated : Aug 16, 2020, 1:54 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் இரணியலையடுத்த காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சித்த வைத்தியர் துளசி. இவருக்கு 2002ஆம் ஆண்டு நாகர்கோவிலை அடுத்த சூரங்குடியைச் சேர்ந்த முருகேசன் என்பருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 12 வயதில் மகளும், 15 வயதில் மகனும் உள்ளனர்.

இந்த நிலையில், வெளிநாட்டில் வேலை செய்து வந்த முருகேசன், கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும் துளசியிடம் வரதட்சணை கேட்டும் முருகேசன் கொடுமைபடுத்தி உள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி வரதட்சணை கேட்டு மனைவி மற்றும் பிள்ளைகளை வீட்டை விட்டு துரத்தியுள்ளார். இதையடுத்து தெருவோரம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்த துளசி, நேற்று (ஆகஸ்ட் 15) வீட்டிற்குள் அனுமதிக்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லையெனவும், காவல் துறையினர் தனக்கு பாதுகாப்பு வழங்கும்படியும் துளசி அழுது புலம்பினார்.

இதையும் படிங்க:காவல் துறையினரை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட 8 பேர் கைது

Last Updated : Aug 16, 2020, 1:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details