தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராகுல் காந்தி பிறந்தநாள்: மருத்துவக் கல்லூரிக்கு நிவாரண பொருள்கள் வழங்கிய விஜய் வசந்த்! - அரசு மருத்துவமனைக்கு நிவாரணம் வழங்கிய விஜய் வசந்த்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரிக்கு எம்பி விஜய் வசந்த் நிவாரண பொருள்களை வழங்கினார்.

மருத்துவக் கல்லூரிக்கு நிவாரணம் வழங்கிய விஜய் வசந்த்
மருத்துவக் கல்லூரிக்கு நிவாரணம் வழங்கிய விஜய் வசந்த்

By

Published : Jun 19, 2021, 10:16 PM IST

கன்னியாகுமரி: ராகுல் காந்தியின் 51ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் நலத்திட்டம், நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சிகள் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

அதில், ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் நோயாளிகளுக்குத் தேவையான ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருள்களை, நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திடம் வழங்கினார்.

பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளின் உறவினர்களுக்கு பல வகை பொருள்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார். இதில் மருத்துவக் கல்லூரி ஊழியர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: கரூர் மாவட்ட திமுக சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 கரோனா நிவாரணம்

ABOUT THE AUTHOR

...view details