தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெடுஞ்சாலையை சீரமைக்கக்கோரி 15 கி மீட்டர் நடந்து சென்று மனு கொடுத்த திமுகவினர்! - கன்னியாகுமரி திமுக போராட்டம்

கன்னியாகுமரி: மிக மோசமான நிலையிலுள்ள தேசிய நெடுஞ்சாலையை செப்பனிடக்கோரி தக்கலையிலிருந்து 15 கிலோமீட்டர் நடந்து சென்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் திமுகவினர் மனு அளித்தனர்.

Dmk road rally petition
Dmk road rally petition

By

Published : Feb 14, 2020, 10:58 AM IST

கன்னியாகுமரி முதல் களியாக்காவிளை மற்றும் காவல்கிணறு வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக பயணிக்க முடியாத அளவு மிகவும் மோசமாக உள்ளதால் நாள்தோறும் விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.

இதனால் இந்தச் சாலைகளை செப்பனிடக்கோரி அரசியல் கட்சிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர் என பல்வேறு தரப்பினரும் பலமுறை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மனுக்களை அளித்துள்ளனர். எனினும் இதுவரை சாலையை சீரமைப்பது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நெடுஞ்சாலை சீரமைக்ககோரி 15 கி மீட்டர் நடந்து சென்று மனு கொடுத்த திமுகவின்!

இந்நிலையில் இந்த சாலைகளை உடனடியாக சீரமைக்கக் கோரி குமரி மாவட்ட திமுக சார்பில் தக்கலையிலிருந்து நாகர்கோவில் வரை 15 கிலோமீட்டர் நடந்து சென்று ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. திமுக எம்எல்ஏ மனோ தங்கராஜ் தலைமையில் நடந்த இந்த நூதன போராட்டத்தில் ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: கொடைக்கானலில் போதைப் பொருள்கள் விற்பனை செய்தவர் கைது

ABOUT THE AUTHOR

...view details