தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னாள் டிஜிபி அதிமுகவில் ஐக்கியம்? - admk

கன்னியாகுமரியில் சாமி தரிசனம் செய்த முன்னாள் டிஜிபி ராஜேந்திரனுடன் அதிமுக நட்சத்திரப் பேச்சாளர் இயக்குநர் பிசி அன்பழகன் உடன் சென்றதால், அவர் அதிமுகவில் ஐக்கியம் ஆகிவிட்டாரோ என பல்வேறு தரப்பில் கேள்வி எழுந்துள்ளது.

tk rajendran
tk rajendran

By

Published : Dec 4, 2019, 6:11 PM IST

குட்கா முறைகேடு வழக்கில் தொடர்புடையவராகப் பேசப்பட்ட முன்னாள் டிஜிபி டி.கே. ராஜேந்திரன் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பிரசித்திப்பெற்ற திருக்கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அந்த வகையில் இன்று காலையில் சுவாமி தோப்பு அய்யா வைகுண்டசுவாமி தலைமைப்பதிக்கு தனது மனைவி, அதிமுக நட்சத்திரப் பேச்சாளர் பி.சி. அன்பழகன் மற்றும் உறவினர்களுடன் சென்று அவர் சாமி தரிசனம் செய்தார்.

பதிக்கு வருகை தந்த அவரை தலைமைப்பதியின் நிர்வாகி, பூஜித குரு பாலஜனாதிபதி வரவேற்று பணிவிடைகளை செய்தார். பின்னர் சுசீந்திரம் தாணுமாலையன் திருக்கோயிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.

முன்னாள் டிஜிபி சாமி தரிசனம்

தமிழ்நாட்டில் அதிகப்படியான இளைஞர்களை சீரழித்த குட்காவை விற்பனை செய்த வழக்கு விசாரணை சூடுபிடித்துவரும் சூழ்நிலையில், அதில் தொடர்புடையவராகக் கருதப்படும் முன்னாள் டிஜிபி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களில்,தரிசனம் செய்து வருகிறார். அவருடன் அதிமுக நட்சத்திரப் பேச்சாளர் இயக்குநர் பி.சி. அன்பழகனும் இருந்ததால் டி.கே. ராஜேந்திரன் அதிமுகவில் ஐக்கியம் ஆகிவிட்டாரோ எனப் பல்வேறு தரப்பினர் மத்தியிலும் கேள்விகள் எழுந்துள்ளன.

இதையும் படிங்க:

'அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு' - வானிலை ஆய்வு மையம்!

ABOUT THE AUTHOR

...view details