கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அலுவலராக இருப்பவர் ரேவதி. மாவட்டத்தில் நடைபெறும் கரோனா தொற்று பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளில் இவர் தீவிரமாக செயல்பட்டு வந்தார்.
குமரி மாவட்ட வருவாய் அலுவலருக்கு கரோனா உறுதி! - corona virus
கன்னியாகுமரி: குமரி மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
District Revenue Officer
இந்த நிலையில் இவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். குமரி மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம், மாவட்டம் முழுவதுமுள்ள அரசு அலுவலர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.