விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் "டெல்லியில் நடந்து வரும் போராட்டங்கள், துப்பாக்கிச்சூடு போன்ற சம்பவங்கள் பெரும் அளவில் நடக்கும் ஒரு போராட்டத்திற்கான ஒத்திகை தான்.
டெல்லி வன்முறை மோடியின் ஒத்திகைதான் -திருமா! - விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்
கன்னியாகுமரி: டெல்லியில் நடைபெற்று வரும் வன்முறை பிரதமர் மோடி, அமித் ஷாவின் ஒத்திகைதான், இந்தியா முழுவதும் வன்முறைக்கு அவர்கள் தயாராகி வருவதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இந்த போராட்டத்திற்கு முழுக்க முழுக்க பிரதமர் மோடியும், அமித் ஷாவும் தான் காரணம். எனவே இந்த வன்முறைக்கு பொறுப்பு ஏற்று அமித் ஷாவும், மோடியும் பதவி விலக வேண்டும். இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தையும் வன்முறையையும் கண்டித்த உயர்நீதிமன்ற நீதிபதி முரளித ராவ் பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த போக்கு நல்லதல்ல. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து 29ஆம் தேதி சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மிகப் பெரிய அளவில் போராட்டம் நடைபெறும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க...கோரேகான் பீமா: இதுவரை 348 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன