தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வரதட்சணை கேட்டு மாமியார் தாக்கியதாக மருமகள் புகார்! - கன்னியாகுமரி மாவட்டச் செய்திகள்

குமரியில் காதல் திருமணம் செய்து குடும்பம் நடத்தி விட்டு வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதோடு, அநாதையாக தவிக்க விட்டு விட்டு சென்ற கணவரை மீட்டுத் தர வலியுறுத்தி இளம்பெண் ஒருவர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

daughter-in-law-complains-that-mother-in-law-attacked-her-for-asking-for-dowry-in-kanyakumari
வரதட்சணை கேட்டு மாமியார் தாக்கியதா மருமகள் புகார்!

By

Published : Jun 5, 2021, 9:14 PM IST

கன்னியாகுமரி:குமரி மாவட்டம் மருங்கூர் அருகே குமாரபுரம் தோப்பூர் பகுதியை சேர்ந்தவர் பவசகிதா (21). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரதீஷ் (28) என்பவருக்கும் இடையே ஆறு வருடங்களுக்கு மேலாக காதல் இருந்து வந்துள்ளது. இதனிடையே பவசகிதாவிற்கு அவரது பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில், கடந்த நவம்பர் 19ஆம் தேதி பவசகிதா, ரதீஷ் ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர், ரதீஷின் சகோதரர் வீட்டில் வைத்து பவசகிதாவுக்கு தாலி காட்டியுள்ளார். இதனைத்தொடர்ந்து தேனியில் உள்ள ரதீஷின் மற்றொரு சகோதரர் வீட்டிற்கு சென்று அங்கு தங்கியுள்ளனர். பின்னர், அவர் மூலமாக ரதீஷ் குடுபத்தினரின் சம்மதம் பெற்று இருவரும் அவர்களது சொந்த ஊரான மருங்கூர் பகுதியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்.

7 மாதமாக எந்த பிரச்சனையும் இன்றி ரதீஷ், பவசகிதா தம்பதிகள் குடும்பம் நடத்தி வந்தனர். அண்மையில், ரதீஷின் அம்மாவிற்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதை அறிந்து சென்ற ரதீஷ் திரும்பி வரவில்லை. இதனைத் தொடர்ந்து பவசகிதா தனது தாயை அழைத்து கொண்டு ரதீஷ் வீட்டிற்குச் சென்ற போது ரதீஷின் அம்மா, அவரது சகோதரி வரதட்சணை கேட்டு பவசகிதாவை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையம், அஞ்சுகிராமம் காவல் நிலையம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவற்றில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தான் ஏமாற்றப்பட்டு இருப்பதாகவும் கூடுதல் வரதட்சணையுடன் ரதீஷிற்கு வேறு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க ரதீஷின் குடும்பத்தினர் முயன்று வருவதாகவும் தெரிவித்த பவ சகிதா தனக்கு நீதி கிடைக்க வில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என கண்ணீர் மல்க பவசகிதா தெரிவித்தார்.

இதையும் படிங்க:தடகள பயிற்சியாளர் நாகராஜனிடம் போலீசார் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details