கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பாதாளச் சாக்கடைப் பணிகளுக்காக சாலைகளில் தோண்டப்பட்ட குழிகள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் சீரமைக்கப்படாமல் உள்ளது.
அரசு அலுவலர்கள் மீது புகார் அளித்து சிபிஎம்! - சாலை
கன்னியாகுமரி: பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளுக்காக சாலையில் தோண்டப்பட்ட குழிகளை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் சீர் செய்யாததால் அரசு அலுவலர்கள் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர்.
ஆபத்தான நிலையில் உள்ள இந்தச் சாலைகளில் பள்ளி மாணவ-மாணவியர், பொதுமக்கள் என ஏராளமானோர் நாள்தோறும் பயணித்துவருகின்றனர். சீர் செய்யாத இந்தச் சாலையால் சில நாட்களுக்கு முன்பு வடசேரியில் ஏற்பட்ட சாலை விபத்தில் பள்ளி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் சாலைகளில் ஏற்படும் புழுதி காரணமாக மக்களுக்கு ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சாலையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்காத நாகர்கோவில் மாநாகராட்சி ஆணையர், பொறியாளர், சுகாதார அலுவலர் உள்ளிட்டோர் மீது சட்டப்படி கொலை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஊர்வலமாக சென்று வடசேரி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.