குமரி மாவட்டம் வெட்டூர்ணிமடம் அடுத்த கிறிஸ்து நகர் பகுதியை சேர்ந்தவர் ரத்தின சிங். இவர் நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோடு பகுதியில் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு நபரிடமிருந்து பழைய சொகுசு கார் ஒன்றை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வந்தார்.
நாகர்கோவில் அருகே சொகுசு கார் திருட்டு! - கார் திருட்டு
கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே சொகுசு கார் திருட்டப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று(டிச.04) இரவு ரத்தின சிங் தனது காரை வழக்கம்போல் கடை முன்பு நிறுத்திவிட்டு வீட்டிற்கு பைக்கில் சென்றுள்ளார். இதையடுத்து இன்று(டிச.05) காலை 10 மணியளவில் கடைக்கு வந்து பார்த்தபோது கார் அங்கு இல்லாததால் அதிர்ச்சியடைந்துள்ளார். பிறகு இதுகுறித்து நேசமணி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அப்புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் அருகிலிருந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது காலை 4.30 மணி அளவில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் அங்கிருந்த காரை திருடிச் செல்லும் காட்சி அதில் பதிவாகியுள்ளது. நேசமணி நகர் காவல் துறையினர் தற்போது சிசிடிவி காட்சியின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, காரை திருடி சென்ற நபரை தேடி வருகின்றனர்.