கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அடுத்த மாங்காலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நோய் குணமடைந்து கடந்த நான்கு நாள்களுக்கு முன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு குமரி மாவட்டத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார்.
இந்தச் சூழலில், இரண்டு நாள்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் சளி காரணமாக கேரளாவில் உள்ள பாறசாலை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார்.
அப்போது அவரை பரிசோதித்ததில் கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மீண்டும் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.