கோயில் என்றாலே திருவிழா, பூஜைகள், மன நிம்மதியைத் தரக்கூடிய, மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய இடமாக விளங்குகிறது. ஆனால் கரோனா விதிமுறை காரணமாக கோயில்களுக்குச் செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
குமரியில் கரோனா
கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த கரோனா பரவல், தற்போது குமரி மாவட்டத்தில் அதிகரித்துவருகிறது. நாளொன்றுக்கு கரோனா பாதிப்பில் 10 என்றிருந்த எண்ணிக்கை, தற்போது 30 என்ற அளவிற்கு உயர்ந்துகொண்டே வருகிறது.
கட்டுப்பாடு
இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், நாகர்கோவில் நாகராஜா கோயில் உள்பட அனைத்து முக்கிய ஆலயங்களில் வழிபாட்டிற்குத் தடைவிதிக்கப்பட்டது.
அனுமதி
கோயிலுக்கு வரும் பக்தர்களுக்குப் பிரசாதம், அர்ச்சனை வழிபாடுகள் நடத்த தீர்த்தம் கொடுக்கக் கூடாது. திருவிழாக்கள், சிறப்பு பூஜைகள் ஏதேனும் நடத்த வேண்டிய நிலை இருந்தால், மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதிபெற்ற பிறகே நடத்த வேண்டும் என்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:'கோயில் பிரசாதம் தபால் மூலம் வழங்க ஏற்பாடு - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்'