தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாழக்குடி கிராமத்தில் வேகமாக பரவும் கரோனா - தாழக்குடி கிராமம்

கன்னியாகுமரி: தாழக்குடி கிராமத்தில் ஒரே நாளில் குழந்தைகள் உட்பட பத்து பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தாழக்குடி
தாழக்குடி

By

Published : Aug 11, 2020, 4:30 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

மேலும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் தாழக்குடி, தோவாளை, ஆரல்வாய்மொழி சுற்றுவட்டார கிராமங்களில் கரோனா தொற்று பாதிப்பு மிக வேகமாக பரவி வருகிறது.

இதனிடையே தாழக்குடி கிராமத்தில் உள்ள மக்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கரோனா பரிசோதனைக்காக சளி மாதிரிகள் சுகாதாரத் துறையினரால் எடுத்து செல்லப்பட்டது.

இதன் முடிவுகள் இன்று (ஆகஸ்ட் 11) வந்த நிலையில், தாழக்குடி கிராமம் பள்ளித்தெரு, ஆசாரிமார் தெருக்களை சேர்ந்த நான்கு குழந்தைகள், நான்கு ஆண்கள், இரண்டு பெண்கள் என பத்து பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த கிராமத்தை சேர்ந்த ஏராளமானவர்களின் கரோனா தொற்று முடிவுகள் வர வேண்டியதுள்ளதால் தாழக்குடி கிராமத்தை சேர்ந்த மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details