சீன நாட்டில் உருவான கொரோனா நோய் கிருமியானது, தற்போது உலகம் முழுவதும் பரவி பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துவருகின்றனர். இந்த நோய் கிருமி தற்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. இந்த நோய் பரவாமல் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
மேலும், பொதுமக்கள் ஓரிடத்தில் கூட வேண்டாம். இதன் மூலம் நோய் கிருமித் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும் என்று அறிவித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல், இந்த நோய் கிருமி தொடர்பான பல்வேறு விழிப்புணர்வுகளும் நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டுவருகின்றன. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் பகுதியில் அமிர்தா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சார்பில் கொரோனா நோய் கிருமி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணியை ஹோமியோபதி மருத்துவர் நாகேந்திரன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்தப் பேரணியில் ஈடுபட்ட மாணவர்கள் கொரோனா நோய் கிருமியை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்த விழிப்புணர்வு அடங்கிய பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர். இந்தப் பேரணியில் மருத்துவர் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் நோய் தடுப்பு மருந்து குறித்து விளக்கமளித்தார்.
அப்போது, “கொரோனா நோய் கிருமியைக் கட்டுப்படுத்த முடியும் அல்லது அதன் வீரியத்தை குறைக்க முடியும். அதற்கு அரசு அறிவித்துள்ள ஆர்செனிக் ஆல்பம் 30(arsenic album 30) என்னும் மருந்தை உட்கொள்ளவேண்டும். மேலும் நீர்ச்சத்துள்ள இளநீர், பதநீர், நெல்லிக்காய் போன்றவற்றை அதிகம் உண்ண வேண்டும்.
கொரோனா வைரஸ் பீதி: உயிர்காக்கும் மருந்து குறித்து மருத்துவர் விளக்கம் நார் சத்துள்ள உணவுகளையும் அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். கைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். நம்மையும் நமது சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். அதன்மூலம் நோய் கிருமியைக் கட்டுப்படுத்தும் முடியும்” என்றார்.