கன்னியாகுமரி : இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் அரவிந்த் கூறியதாவது, " கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா இரண்டாம் அலையின்போது நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்குத் தொற்று ஏற்பட்டது. தற்போது ஒரு நாள் பாதிப்பு 50-க்கும் கீழ் குறைந்து வருகிறது. காவல்துறையினர், பொதுமக்களின் ஒத்துழைப்பு காரணமாக இரண்டாம் அலை கட்டுப்படுத்தப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
பொதுமக்கள் முகக்கவசங்கள் அணிந்தும், தகுந்த இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கரோனா மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் என கூறப்படுவதால், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.