கன்னியாகுமரி: ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி முதல் 148 நாட்கள், 3,700 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரை செல்ல உள்ளார். இந்நிலையில் பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகள் குறித்து விஜய்வசந்த் எம்பி தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மற்றும் காவல் கண்காணிப்பாளருடன் ஆலோசனை நடத்தினர்.
நடந்து செல்லும் வழிதடங்கள் ஆய்வு பணிகள் செய்து வருவதாக கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்திய ஒற்றுமை நடைபயணம் என்ற பெயரில் தினமும் 25 கிலோமீட்டர் பாதயாத்திரை செல்கிறார். பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களில் காங்கிரஸ் தலைவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.